Skip to main content

Posts

Showing posts from August 26, 2016

கொடுங்கள்.. பெறுவீர்கள்!!!!

கொடுங்கள்.. பெறுவீர்கள்!!!! பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்கத் தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்தப் பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக் கொண்டு இருந்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. கால்களை நகர்த்தவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான். அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப் செட்டும் அருகே ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அந்தப் பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்." அந்தப் பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது. அந்தத் தண்ணீர் ஊற்றினால் அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்...

**** நான்... நான்... நான் .... *****

நான்... நான்... நான்... நான் சம்பாதித்தேன், நான் காப்பாற்றினேன், நான் தான் வீடு கட்டினேன், நான் தான் உதவி  செய்தேன், நான் உதவி  செய்யலனா? அவர்  என்ன ஆகுறது!!!!! நான்  பெரியவன், நான்  தான்  வேலை  வாங்கி  கொடுத்தேன், நான்  நான்  நான்  நான்  என்று  மார்தட்டி  கொள்ளும் மனிதர்களே!!!... நான்தான்  என் இதயத்தை இயக்குகிறேன்  என்று  உங்களால்  சொல்ல முடியுமா? நான்  தான்  என் மூளையை  இயக்குகிறேன் என்று  உங்களால்  சொல்ல முடியுமா? நான்  தான்  என் இரண்டு  கிட்னியையும்  இயக்குகிறேன்  என்று  உங்களால்  சொல்ல முடியுமா? நான்  தான் என் வயிற்றில்  சாப்பிட்ட உணவில்  இருந்து சத்துக்களை  தனியாக  பிரித்து  இரத்தத்தில்  கலக்குகிறேன் என்று  உங்களால்  சொல்ல முடியுமா?? நான்  தான்  பூக்களை  மலர  வைக்கிறேன்  என்று  உங்களால்  சொல்ல முடியுமா ? நான்  தான்  காய்...

*** ”சர்வம் கிருஷ்ணார்பனம்” இந்த வாக்கியத்தை முதலில் கூறியது யார்? ***

”சர்வம் கிருஷ்ணார்பனம்” இந்த வாக்கியத்தை முதலில் கூறியது யார்? சர்வம் கிருஷ்ணார்பனம் என்று சொன்னவன் கர்ணன். பரசுராம் என்ற பிரமணரின் சாபத்தால் பாரத போரில் தோற்ற கர்ணன்: முன்னொருநாளில் அந்தணரால் கொடுக்கப்பட்ட சாபத்தால் போர் தருவாயில் கர்ணனின் தேர் சகதியில் சிக்கிக் கொள்கிறது. பரசுராமரின் சாபத்தால் முக்கியமான தருணத்தில் அஸ்திரத்திற்கான மந்திரம் கர்ணனுக்கு மறந்து போகிறது. கர்ணன் உடல் மீது அர்ஜுனனின் அம்புகள் தைத்தது. ஆனாலும் உயிர் பிரியவில்லை. அந்தனராக வந்த கிருஷ்ண பகவான்: பின்பு கிருஷ்ணபகவான் அந்தணர் வேடத்தில் கர்ணன் முன் தோன்றி தான் மலைகளில் தவம் பூண்டிருப்பதாகவும் கர்ணனின் கொடை குறித்து அறிந்ததால் கர்ணனிடன் யாசகம் பெற வேண்டி வந்ததாக உரைக்கிறார். இந்த இடத்தில் கிருஷ்ண பரமாத்மா பொய் உரைப்பதாக தோன்றும். ஆனால் அவ்வாரு அல்ல. பகவான் அனைவர் மனதிலும் நித்தம் நித்தம் தவம் செய்து கொண்டுதான் இருக்கிறார். அதை நாம்தான் உணர மறுக்கிறோம் சர்வம் கிருஷ்ணார்பனம்: யாசகம் கேட்டு வந்திருப்பது அந்தனர் அல்ல கிருஷ்ணர்தான் என்றுணர்ந்த கர்ணன். என்னிடம் இல்லாததை கேட்டு என்னை இல்லை என்று...

******* கஸ்டமர் கேர் பதிலடி ********

கஸ்டமர் கேரில் வேலை செய்யும் ஒருவர், ஒரு வாடிக்கையாளரை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு செல்ல முடிவெடுக்கிறார். அந்த வாடிக்கையாளர் அடிக்கடி தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பவர். எப்படியாவது இன்று அவரை சந்தித்து, அவரது எல்லா சந்தேகங்களையும் முழுவதுமாக தீர்த்து வைக்கவேண்டும். அது முடியாவிட்டால் இனிமேல் தொல்லை கொடுக்க முடியாதவாறு நன்றாக திட்டிவிட்டு வரவேண்டும் என்ற முடிவுடன் அவரது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வாடிக்கையாளரின் வீடானது அந்த தெருவின் இறுதியில் தனியாக இருந்தது. தனது, வண்டியை நிறுத்திவிட்டு, வீட்டிற்கு முன்பிருந்த கேட்டினை திறந்து கொண்டு உள்ளே சென்றார். கேட்டிற்கு பக்கத்திலேயே ஒரு பெரிய பெட்டி இருந்தது. அதன் மேல் "உங்களது அன்பிற்கு மிகவும் நன்றி" என்று எழுதி இருந்தது.... அவரும் அதனைப் பார்த்தவாறே முன்னேறி காலிங் பெல் அருகில் சென்றார். அதன் அருகில் வித்தியாசமாக 0 முதல் 9 வரையிலான எண்களைக் கொண்ட பட்டன்கள் இருந்தன. அதனை பார்த்தாவாறே அவர் காலிங் பெல்லை அழுத்தினார். "வணக்கம்" என்ற குரல் கேட்டது. அதிர்ச்சியுடன் பின் வாங்கினார். பின் குரல...

Shocking info about Cooking oils !!!!

“சரி நண்பர்களே .. உங்க வீட்டுல இறைச்சி எத்தனை நாளுக்கு ஒரு தடவை எடுப்பாங்க…” “எங்கப்பா மாசத்துக்கு அல்லது வாரத்திற்கு ஒரு தடவைதான்…” “மாசத்துக்கு அல்லது வாரத்திற்கு ஒரு தடவை சாப்பிட்ற, உடம்புக்குள்ள எப்படி கொழுப்பு சேரும்…? கோழிக்கறியும், இறைச்சியும் சாப்பிடாம எப்படி சுகர் வருது… பணக்காரர்களுக்கு மட்டும் வந்துட்டு இருந்த வியாதி இப்போ, கூழும் கஞ்சியும் குடிக்கிற அண்ணாடங்காச்சிக்கு எப்படி வருது…?” “ஆமாம்ப்பா . எப்படி..” “உன்னோட உடம்புல சேர்ற கொழுப்பு இறைச்சினால வரக்கூடியது கிடையாது.  எண்ணெய்னால வரக்கூடியது…?” “என்னாண்ணே சொல்றீங்க…?” “ஆமா உன்னோட வீட்ல சமையலுக்கு என்ன எண்ணெய் வாங்குற…” “பொறிச்சாலும் எண்ணெயின் நிறம் மாறவே மாறாத சூரியகாந்தி எண்ணெய்தாண்ணே…” “ நீ மட்டும் இல்லை முருகா… இந்தியாவுல இருக்கிற குறிப்பா தமிழகத்துல இருக்கிற 6.5 கோடி மக்கள்ல, 5 கோடி மக்கள் சூரியகாந்தி எண்ணெய்தான் பயன்படுத்திட்டு வர்றாங்க…” “ஒரு நாளைக்கு தமிழ் நாட்டுல பயன்படுத்தக்கூடிய சூரியகாந்தி எண்ணெய்யின் அளவு (வீடு மற்றும் ஹோட்டல் மூலமாக) 1 கோடி லிட்டருக்கு மேல்.” “நல்ல விஷயம்தானண்ணே… சூரியக...