Jai Sri Ram
தம்முடைய நியதிப்படி, சனீஸ்வரர் அனுமனைப் பிடிக்கவேண்டிய காலம். சனீஸ்வரர் அனுமனைப் பிடிக்கத் தொடர்ந்தார். அனுமன் ஓர் அறையில் கதவைத் தள்ளி நுழைந்தார். அப்போது அனுமனின் வால் மட்டும் கதவின் இடுக்கில் மாட்டிக்கொண்டது. எனினும், அந்த வாலும் சனியின் கையில் சிக்கவில்லை. கடைசியில் சனியிடம் அனுமன் கேட்டார்: பிடிப்பது எத்தனை ஆண்டுகள்? சனி, ஏழரை ஆண்டுகள் என்றார். ஏழரை ஆண்டுகளும் இங்கேயே ராம நாமத்தை ஜபித்துக் கொண்டிருப்பேன். உன்னால் முடிந்தால் என்னைப் பிடித்துக் கொள் என்றார் அனுமன். அவரின் பக்தியை மெச்சி, வேறு வழியில்லாமல் விட்டுவிட்டார் சனீஸ்வரன். இதற்குப் பின்தான் ஆஞ்சநேயரின் வாலை வழிபடும் வழக்கம் உருவாயிற்று. 41 நாட்கள் அனுமனின் வாலில் குங்குமம் வைத்து துளசி மாலை சாத்தி வழிபட, எல்லாவித தோஷங்களும் நீங்கி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் கிட்டும் என்பது நம்பிக்கை.
Sri Rama Jayam
Comments
Post a Comment