80களில் ஆரம்பித்தது இது..
பக்கத்து வீட்டு மாமி வந்து சொல்வார்: “ என் பையன் பிட்ஸ்பர்க்ல இருக்கான்...! ஆஹா..! என்ன ஊரு தெரியுமா..? ரெண்டு காரு வெச்சுண்ட்ருக்கா..! மருமாளே கார தனியா ஓட்டிண்டு போறா..! கண்ணாடி மாதிரி ரோடு..!"
அவ்ளோதான்...! இந்த மாமியும் தம் பிள்ளை இந்தியாவில் வேலை செய்வது தன் வம்சத்திற்கே மானக்கேடு என்று, அவனை பிடுங்கி எடுக்க, இப்படீ MIG குடும்பங்கள் எல்லோரும் பிள்ளைகளை யுஎஸ்ஸிற்கு அனுப்புவதை தவமாய் வரித்துக் கொண்டு, கடந்த 40 வருடங்களாக நம் இளைஞர்களுக்கு யுஎஸ் என்பதே வாழ்வின் ஒரே லட்சியமாகிப் போனது..!
மகன்/மகளை யுஎஸ்ஸிற்கு அனுப்பிவிட்டு, பிறகு பிரிவு தாளாமல், தானும் யுஎஸ் செல்லும் ‘பெருசு’களால், அங்கே ஒட்டி வாழ முடிவதே இல்லை..!
அங்கே -10 குளிரில் அவர்கள் சென்னையின் வெயிலை தேடுகிறார்கள்..!
சுத்தமான ரோடுதான்; ஆனால், அவர்கள் மனமோ கச்சேரி ரோட்டின் ‘கலகலப்பிற்கு’ ஏங்குகிறது..!
வீட்டிற்குள்ளேயே ‘ஃப்ரிட்ஜில் வைத்த தயிர் சாதம்’ சாப்பிட்டுக் கொண்டு எத்தனை நாட்கள்தான் ஆளரவமற்ற ரோட்டைப் பார்த்துக் கொண்டு கிடப்பது..? ‘அப்டீ காலார அயோத்தியா மண்டபம் போய், கச்சேரி கேட்டுட்டு, அப்டியே சூடா மிளகா பஜ்ஜி சாப்பிட’ மனம் அலைபாய்கிறது..!
அதனால், இருக்க முடியாமல், போன வேகத்தில் அவர்கள் இந்தியா திரும்பி வந்து விடுகிறார்கள்..!
நாற்பது வயதில், தன் குழந்தைகள் டீனேஜிற்குள் நுழையும் போது, யுஎஸ்ஸில் இருக்கும் மகனுக்கும் பயம் வருகிறது..! இந்தியா திரும்ப வேண்டும் என்று நினைக்கிறான்..! ஆனால், திரும்ப இங்கே வந்து மாமனார் மாமியாரோடு வாழ அவன் மனைவி விரும்புவாளா..? அவளென்ன முட்டாளா..?
இப்படீ.....
“இந்த வாழ்க்கை சந்தோஷமாய்த்தான் இருக்கிறதா..?” என்றே புரியாமல் அங்கே பிள்ளைகளும்.....
நண்பர்களிடம்/சொந்தக்காரர்களிடம் பெருமை பேசிக் கொண்டு, ஆனால் ‘திரிசங்கு வாழ்க்கை’ வாழ்ந்து கொண்டு, மாற்றத்திற்கும் வழியே இல்லாமல், மனதிற்குள் புழுங்கிக் கொண்டு, இங்கே பெற்றோர்களும்....
உங்களிடம் வந்து “ பிள்ளை மினிசோட்டால இருக்கான்..! ரோடு கண்ணாடி மாதிரி..!"என்று பேசும் மாமா/மாமியிடம், அவர் முடித்தவுடன் “சரி.... அப்ப நீங்க ஏன் இங்கே இருக்கீங்க..? சந்தோஷமாத்தான் இருக்கீங்களா..?” என்று கேட்டுப் பாருங்கள்..? அவர் கண்களின் ஓரத்தில் சிறு துளி கண்ணீர் பார்ப்பீர்கள்...!
எனில், US போவது தேவைதானா என்பது ஒன்றுக்கு பலமுறை 'யோசித்து எடுக்க வேண்டிய' முடிவு..! பிறகு வேண்டாம் என்று நினைத்தாலும் மாற்ற முடியாமல் போய் மனக்கிலேசத்தோடு வாழ வேண்டியிருக்கும்..!
ஆதலால், பெற்றோர்களே..!
1. பணம் சேர்க்கத்தான் அனுப்புகிறீர்கள் என்பதில் நீங்கள் கிளையராய் இருக்கிறீர்கள் என்றால் நல்லது. மனக்கிலேசங்கள் வரும்போது அதை ஞாபகப்படுத்திக் கொள்ளூங்கள்..!
2. பையன் அங்கே போய் விட்டால் அப்புறம் திரும்பி இங்கே வந்து வாழ்வது நடப்பதில்லை என்பதை சரியாக உணர்ந்து கொண்டு அனுப்புங்கள். தனிமை வாழ்க்கை எப்படி வாழப் போகிறோம் என்பதை சிந்தித்து பிளான் செய்து கொள்ளுங்கள்.!
3. 'என் பையன் USல இருக்கான்..!' என்று சொல்லிக் கொள்ளும் பந்தாவிற்காக 'மட்டுமே' அனுப்புகிறீர்கள் என்றால் இந்தப் பதிவை இன்னொரு தடவை படியுங்கள்..!

Comments
Post a Comment