#என்_மனைவியாக_நீ........
நாள் ஒன்றுக்கு நாலு சண்டை வேண்டும்,
நான்கும் அன்று இரவே முடிய வேண்டும்,
இரவில் புதிய சண்டை வேண்டும்,
எப்போதும் போல அதிலும் நீயே வெற்றி பெற வேண்டும்,
என் முத்த ஈரத்தில் நீ கண் விழிக்க வேண்டும்,
கண் விழித்த உனை பார்த்தே தினம் என் காலை விடிய வேண்டும்,
முத்தத்தின் ஈரம் காய்ந்து போவதற்கு முன் சண்டைகளுடன் இரவு தொடங்க வேண்டும்,
என் சமையலில் விருந்தளிக்க விடுமுறை நாட்கள் வேண்டும்,
உனக்காக பணி புரிய உன் முடியாத நாட்கள் வர வேண்டும்,
உன்னுடன் ஊர் சுற்ற ஒரு புது உலகம் வேண்டும்,
உருவம் இல்லா உயிர் ஒன்று உன் வயிற்றில் கருவாக வேண்டும்,
ஒன்றே போதும் என்று தினம் கெஞ்ச வேண்டும்,
நீ எனக்கு அளிக்கும் முத்தத்தை பங்கு பிரிக்க உனை போல் அழகு குழந்தை வர வேண்டும்,
இருவருக்கும் தாயாக நான் இருக்க வேண்டும்,
தலையனையாய் நீ வேண்டும்,
விடியல் இல்லாத இரவு வேண்டும்,
இறுதியாக ஒரு வரம் வேண்டும்,
என் ஆயுள் முடியும் அந்த நொடி, உன் முத்த இதழை பொறுத்தி விடு,
அந்த முத்த ஈரம் காயும் முன்னே என் மூச்சையும் நிறுத்தி விடு.....
Comments
Post a Comment