Skip to main content

புவிக்கோளம் என்பதே ஒரு நீர்க்கோளம்.

புவிக்கோளம் என்பதே ஒரு நீர்க்கோளம்.
எங்கும் நீர் - எதிலும் நீர்.
தாவரங்களும் நீரே! விலங்குகளும் நீரே!

தாகம் தணிக்கும் வெள்ளரி என்பது 96% நீர்.
சமையலில் பயன்படும் தக்காளி என்பது 95% நீர்.
விலங்குகளில் பெரிய யானை என்பது 70% நீர்.
மிகச் சிறிய மண்புழுவானது 80% நீர்.

நம் மனித உடலும் கூட 70% நீர்தான்.
நாம் சிந்திக்கும் மூளை என்பது 90% நீர்.
உடலில் ஓடும் குருதி என்பது 80% நீர்.
மூச்சு விடும் நுரையீரல் என்பது 70% நீர்.
எலும்பும் தோலுமாய் இருக்கிறார் என ஒருவரை கேலிச் செய்வோமே, அந்தத் தோலில் இருப்பது 64% நீர். எலும்பும் கூட 31% நீரே!

இவ்வளவு ஏன்? நம் ஒருநாள் மூச்சில் வெளியாவது ஒரு கோப்பை நீர்.
நீர் இல்லாவிட்டால் மூச்சே இல்லை.
நம் உடலில் உள்ள நீரில் 1% குறைந்தால் அது தாகம்.
அதுவே 10% குறைந்தால் அதன் பெயர் மரணம்.
அறிய வேண்டியது... காற்று மட்டுமே உயிரல்ல,
நீரும் உயிரே!

தண்ணீர் அரசியல் எங்கிருந்து தொடங்குகிறது?

ஒரு பாத்திரத்தில் 4 லிட்டர் நீரை எடுத்துக்கொள்வோம். அதிலிருந்து ஒரு தேக்கரண்டி நீரை வெளியே எடுப்போம். இக்கரண்டி நீரைத் தவிரப் பாத்திரத்தில் இருப்பதெல்லாம் கடல்நீர். கரண்டியில் இருப்பது மட்டுமே நன்னீர். இப்போது கரண்டி நீரிலிருந்து ஒரு சொட்டு நீரை விரலால் ஒற்றியெடுங்கள். கரண்டியில் இருக்கும் நன்னீர் அனைத்தும் துருவப்பகுதிகளில் பனிக்கட்டிகளாக உறைந்திருப்பவை. விரலில் ஒட்டியிருக்கும் சொட்டு நீர்தான் அனைத்துயிர்களும் உயிர்வாழக் கிடைக்கும் நீராகும். இந்தச் சொட்டு நீரில் இருந்துதான் தண்ணீர் அரசியலும் தொடங்குகிறது. .

புள்ளிவிபரமாகப் பார்த்தால் உலகின் மொத்த நீர்வளம் 138.6 கோடி கன கிலோ மீட்டர். இதில் நன்னீரின் பங்கு 3.5 கோடி கன கி.மீட்டர்தான். அதாவது நூற்றுக்கு 2.5% பங்கே. இதை மேட்டூர் அணை அளவுக்கு ஒரு நீர்த்தேக்கம் கட்டி மொத்த நன்னீரையும் தேக்கினால் 132 இலட்சம் மேட்டூர் அணைகளில் தேக்கிவிட முடியும். 1950ல் உலகிலுள்ள நன்னீர் வளத்தைச் சமமாகப் பங்கிட்டால் ஒருவருக்கு ஆண்டுக்கு 17,000 கன மீட்டர் என்கிற அளவுக்குத் தண்ணீர் வளம் இருந்தது. தற்போது ஒருவருக்கு ஆண்டுக்கு 7000 கன மீட்டர் அளவுக்கு இருக்கிறது. இன்றைக்கு உலகத் தனிநபர் ஆண்டு நீர் தேவையோ 1700 கன மீட்டர்தான். அப்படியானால் ஏன் அனைவருக்கும் இந்த நீர் கிடைப்பதில்லை?

உலகில் நன்னீர் இருக்குமிடமும் மக்கள் தொகையும் சமமாக விரவிக் காணப்படுவதில்லை. உலக நன்னீர் இருப்பில் இந்தியாவின் பங்கு 4% என்றால் உலக மக்கள் தொகையில் இந்தியாவின் பங்கு 16% ஆகும். ஆக நான்கு பேருக்குத் தண்ணீர் கிடைக்க வேண்டிய இடத்தில் ஒருவருக்கே தண்ணீர் கிடைக்கிறது என எளிமையாகப் புரிந்துக் கொள்ளலாம். இதில் தமிழ்நாட்டின் நிலை என்ன?

கடந்த 2002ஆம் ஆண்டுக் கணக்கின்படி தமிழ்நாட்டின் தனிநபர் நீர்வளம் ஆண்டுக்கு 800 கன மீட்டர் ஆகும். உலகத் தனிநபர் ஆண்டு நீர் தேவையான 1700 கன மீட்டரோடு ஒப்பிடும்போது, பற்றாக்குறை 900 கன மீட்டர் ஆகும். அதாவது 54.94% குறைவு. வரும் 2050லோ தமிழ்நாட்டின் தனிநபர் ஆண்டு நீர்வளம் 435 கன மீட்டராக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் பற்றாக்குறை 1260 கன மீட்டராக அதாவது 74.41% ஆக அதிகரிக்கப் போகிறது.

1940ஆம் ஆண்டிலிருந்தே உலக மக்கள் தொகை ஒவ்வோராண்டும் 1.5 – 2 விழுக்காடு அளவுக்கு மட்டும் உயர நீர் பயன்பாடோ 6 மடங்காக உயர்ந்து வருகிறது. இதனைக் கவனத்தில் கொண்ட அரசுகள் எதுவும் நமக்கு இதுவரை வாய்க்கவில்லை. வருங்காலத்தில் நூற்றுக்கு 75 விழுக்காடு தனிநபர் நீர்வள பற்றாக்குறையைச் சந்திக்கப் போகும் தமிழ்நாட்டில் அதற்கான திட்டம் எதுவும் நமது அரசியல் வணிகர்களிடம் இருக்கும் என்று நம்புகிறீர்களா?

உலகம் தோன்றியபோது எவ்வளவு நீர் இருந்ததோ அதே அளவு நீர்தான் இன்றும் இருக்கிறது. அந்த அளவில் ஒரு சொட்டுக்கூட அதிகரிக்கவும் இல்லை, குறையவும் இல்லை. அப்படியானால் ஏன் இந்தளவுக்கு நீர் தட்டுப்பாடு நிலவுகிறது?

நன்னீரை அதன் இயல்பின் அடிப்படையில் மூவகை வண்ணங்களாகப் பிரிப்பர். அவை:
1) பச்சை நீர்
2) நீல நீர்
3) சாம்பல் நீர்

பச்சைநீர் என்பது நீராவி நிலையில் வளிமண்டலத்தில் இருக்கும் நீராகும். நீலநீர் என்பது புவியின் மேற்பரப்பில் உள்ள நீர்நிலைகளில் காணப்படும் நீர். இந்த இருவகை நீரும் புவி தோன்றிய காலத்திலிருந்தே நீர்ச்சுழற்சிக்கு உட்பட்டுக் காலாகாலமாக இருந்துவரும் நீராகும். இவற்றோடு மனிதர்கள் உருவாக்கிய சாம்பல்நீர் உண்டான பிறகுதான் நீர்ச் சிக்கல் தோன்றியது. சாம்பல் நீர் என்பது வேறொன்றுமல்ல அது கழிவுநீரே ஆகும்.

தொழிற்புரட்சிக்கும் நகரமயமாக்கலுக்கும் பிறகு சாம்பல்நீர் பேரளவில் பெருகியது. தொழிற்சாலைகளால் பெருக்கப்பட்ட சாம்பல்நீர், நம் நீர்நிலைகளைக் கெடுத்ததோடு நில்லாது நிலத்தடி நீரையும் சேர்த்துப் பாழாக்கியது. நன்னீரெல்லாம் இப்படிச் சாம்பல் நீராக மாறியதால் புவியெங்கும் நன்னீரின் அளவு குறைந்தது. இது மேலும் நச்சுத்தன்மை மிகுந்ததாகி ‘கருப்பு நீர்’ என்றும் அழைக்கப்படுகிறது. மொத்தத்தில் இவை வளர்ச்சி என்ற பெயரில் உருவாக்கப்பட்ட செயற்கை நீர்ப் பற்றாக்குறையேயாகும்.

ஓர் எடுத்துக்காட்டைப் பார்ப்போம். ஒரு லிட்டர் குருடாயில் ஒரு நீர்நிலையில் தவறிக் கொட்டப்பட்டு விட்டால் அது 1 இலட்சத்து 58 ஆயிரம் லிட்டர் நன்னீரைப் பாழாக்கிவிடும். அப்படியென்றால் ஒட்டுமொத்தமாகத் தமிழகம் முழுவதும் உள்ள வேதிபொருட்களைக் கையாளும் தொழிற்சாலைகளால் மொத்தம் எத்தனை கோடி கன லிட்டர் நீர் பாழாகியிருக்கும்?

ஒரு குற்றவாளிக்கும் தொழிலதிபருக்கும் உள்ள வேறுபாட்டைக் கிளாட் ஆல்வரஸ் என்கிற சூழலியல் அறிஞர் இப்படி விளக்குவார்: ஊரின் நீர்த்தொட்டியில் ஒருவர் நஞ்சைக் கலந்தால் எனில் இந்தியக் குற்றவியல் சட்டபடி அவர் ஒரு குற்றவாளி. அவருக்குச் சட்டபடி சிறைத்தண்டனை கிடைக்கும். ஆனால் அதே செயலை ஒருவர் ஊரில் பெரும் தொழிற்சாலை ஒன்றைக் கட்டி ஊரின் குடிநீர் தொட்டியைவிட மிகப்பெரிய தொட்டியான நிலத்தடி நீர் எனும் தொட்டிக்குள் நஞ்சைக் கலந்தால் அவர் குற்றவாளி அல்ல, அவர் பெயர் தொழிலதிபர். அவருக்குத் தண்டனைக் கிடைக்காது மாறாகப் பதக்கமும் பாராட்டும் கிடைக்கும்.

நன்னீரானது ஒருமுறை இப்படி சாம்பல் நீராக மாறினால் அவை திரும்பவும் நன்னீராக மாற அதில் கலந்துள்ள வேதிப்பொருட்களைப் பொறுத்து ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகலாம். தமிழகத்தின் நன்னீர் இருப்பின் பெரும்பகுதி சாம்பல் நீராக ஏன் கருப்பு நீராக மாறியதே நமது கடுமையான நீர் பற்றாக்குறைக்கு காரணம். சாட்சிக்கு நொய்யல், பாலாறு என்கிற இரண்டு பெயர் போதாதா?

ஒரு நீர் மூலக்கூறின் 100 ஆண்டுக் கால வாழ்வில் அது 98 ஆண்டுகள் கடலில் வாழ்கிறது. 20 மாதங்கள் பனிக்கட்டியாக இருக்கிறது. வளிமண்டலத்தில் ஒருவாரத்துக்கும் குறைவாகவே தங்குகிறது. இங்கெல்லாம் அதற்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் நிலத்தில் இரு வாரங்கள் மட்டும் தங்குகையில்தான் மனிதரின் கையில் சிக்கி அது இயல்பை இழந்து கழிவுநீர் எனும் பெயர் பெறுகிறது. மனிதரைத் தவிர வேறு எந்த உயிரினமும் இப்படி நீரை பாழாக்குவதில்லை, நஞ்சாக்குவதில்லை.

மனித ஆதிக்கத்தினால் மேற்பரப்பு நீரில் 70 விழுக்காடும், நிலத்தடி நீரில் 50 விழுக்காடும் பாதிப்பு அடைந்துள்ளதாக world Water Institute – 2000 ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது. தொழிற்சாலை கழிவுநீரையும் சேர்த்து உலகளவில் 12,000 கன கிலோ மீட்டர் கழிவுநீர் உற்பத்தியாகிறது என்பது 2004ஆம் ஆண்டுக் கணக்கு. எதிர்வரும் 2025ல் இது 18,000 கன கிலோ மீட்டராக அதிகரிக்கவிருக்கிறது. வளரும் நாடுகளில் 75% தொழிற்சாலை கழிவுநீரும், 90%க்கும் அதிகமான சாக்கடைகளும் தூய்மை செய்யப்படாமலேயே நீர்நிலைகளில் கலக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் 8% கழிவுநீரே நன்னீராக்கி வெளியிடப்படுகிறது (UNEP 2010)

ஆனால் நம்மைப் போன்ற வளரும் நாடுகளில் உற்பத்தியாகும் கழிவுநீர் முழுக்க அந்தந்த நாட்டு மக்கள் பயன்பாட்டினால் மட்டும் ஏற்படுவதல்ல. ஏற்றுமதி என்கிற பெயரில் வேறொரு பணக்கார நாட்டு மக்களுக்காக நமக்குரிய நன்னீர் கழிவுநீராக மாற்றப்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உலகின் 85% நீரை 12% மக்களே நுகர்கின்றனர். இவர்களில் எவரும் மூன்றாம் உலக நாடுகளில் வசிப்பவர் அல்ல.

உலக நலவாழ்வு துறை (WHO) ஒரு தனிநபரின் அன்றாட வாழ்வுக்குப் பரிந்துரைக்கும் நீரின் அளவு:

குடிக்க - 05 லிட்டர்
துவைக்க - 20 லிட்டர்
குளிக்க          - 55 லிட்டர்
சமைக்க  - 05 லிட்டர்
பாத்திரம் கழுவ – 10 லிட்டர்
வீடு கழுவ - 10 லிட்டர்
கழிவறை - 30 லிட்டர்
----------------------------------------------------
மொத்தம்  - 135 லிட்டர்

ஆனால் ஐக்கிய அமெரிக்காவில் தனிநபரின் ஒருநாள் புழங்குநீர் அளவு என்ன தெரியுமா? 803 லிட்டர். அதேசமயம் தமிழ்நாட்டில் தனிநபரின் ஒருநாள் புழங்குநீர் அளவு வெறும் 80 லிட்டரே.

1 மைல் நீளம் 1 மைல் அகலம் 4 அடி ஆழம் அளவுள்ள எரி அளவுள்ள ஒரு ஏரியை கற்பனை செய்து கொள்ளுங்கள். இவ்வளவு பெரிய ஏரியில் உடனடியாக நீரை நிரப்பிச் சேமிக்க ஓர் எளிய வழி இருக்கிறது. ஐக்கிய அமெரிக்காவில் உள்ள ஒவ்வொருவரும் நாளொன்றுக்கு ஒரே ஒருமுறை மட்டும் டாய்லெட் ஃப்ளஷ் செய்வதைக் குறைத்தால். இது முழுக்க நிரம்பிவிடும்.

நாம் நம் ஊர் ஏரி நீரையும் நிலத்தடி நீரையும் சுரண்டி அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோம்.

நம் நிலத்தடி நீர் என்ன அழகில் இருக்கிறது தெரியுமா?

ஐந்தாண்டுகளுக்கு முன்பு நடுவண் அரசின் நிலத்தடி நீர் ஆணையம் தமிழகத்தில் ஆய்வு மேற்கொண்டு நம் நிலத்தடி நீரில் மூன்று வேதிப்பொருட்கள் அதிகளவில் இருப்பதாக அறிக்கை வெளியிட்டது. அவை:
1) ஃபுளோரைட், 2) குளோரைட், 3) நைட்ரேட் ஆகும். இவற்றில் ஃபுளோரைட், குளோரைட் பெருக்கத்துக்கு நிலத்தடி நீர் அதிகளவில் உறிஞ்சப்படுவதே காரணம். நைட்ரேட் பெருக்கம் என்பது பசுமைப் புரட்சியின் அன்பளிப்பு. இவற்றின் பாதிப்புகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

தமிழகத்தின் 19 மாவட்டங்களில் ஃபுளோரைட் பாதிப்பு இருக்கிறது. நம் நிலத்துக்கு அடியிலுள்ள பாறைகள் ஃபுளோரசிசை உள்ளடக்கியுள்ளது. புவிக்குள் ஆழத்துளையிட்டு தண்ணீரை உறிஞ்சுகையில் அவ்விடத்தில் நீர் குறைந்து காற்று நிறைகிறது. அக்காற்றுடன் ஃப்ளோரசிஸ் வினைப் புரிந்து ஃப்ளோரைடு உருவாகிறது. நிலத்தடி நீர் குறையக் குறைய ஃபுளோரைடின் வீரியம் அதிகமாகும். இந்த ஃபுளோரைடானது எலும்பு மஜ்ஜையிலுள்ள குருதி சிவப்பணுக்களின் உற்பத்தியை குறைத்துவிடும். குழந்தைகளின் உடலில் இரும்புச்சத்து சேராதபடி தடுப்பதோடு பற்களையும் பாதிக்கும். மேலும் எலும்பு தொடர்பான நோயினை உண்டாக்கி இளைஞர்களையும் முதியவர்களைப் போல உருமாற்றும்.

மிகையான உறிஞ்சுதலால் சென்னையின் நிலத்தடி நீர்மட்டம் 1990களுக்குப் பிறகு 4 மீட்டர் ஆழத்துக்கு இறங்கிவிட்டது. இதனால் குளோரைடின் அளவு இரட்டிப்பாகி விட்டது. நீரில் உப்புத்தன்மை கூடினால் ஏற்படும் பாதிப்பு குறித்து விளக்க வேண்டிய அவசியமில்லை. இதுபோல் நீலகிரி தேயிலைத் தோட்டம் தொடங்கிக் காவிரி கழிமுகம் வரை வேளாண்மை நடைபெறும் அனைத்து இடங்களிலும் வேதியுர பயன்பாட்டால் நைட்ரேட் பாதிப்பு அதிகமிருக்கிறது.

நீரில் நைட்ரேட் அளவு 50 பிபிஎம் அளவைத் தாண்டும்போது அது நமது குருதியின் உயிர்வளியேற்ற (oxidizing) பணியைப் பாதிக்கிறது. குறிப்பாகப் பிறந்த குழந்தையிடத்து உயிர்வளி (ஆக்சிஜன்) உள்ளீர்த்துக் கொள்வதில் பாதிப்பை ஏற்படுத்தி ‘புளூபேபி சிண்ட்ரோம்’ (Methemoglobinemia) நிலைக்கு ஆளாகும். இது குழந்தையின் மரணத்துக்கு இட்டுச் சென்றுவிடும்.

பொதுவாக 1200 அடிகளுக்குக் கீழே போனால் நிலத்தடி நீரில் ‘ஃபெரஸ் அயனி’ இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது கடினத்தன்மையுடைய நீராகும். இதனால் தமிழகத்தின் பல இடங்களின் நிலத்தடி நீரில் மின் கடத்தும் திறன் வழக்கமான அளவைவிட 5 மடங்கு அதிகமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்தளவுக்கு நீரின் கடினத்தன்மை இருக்கிறது. தமிழகத்திலுள்ள பல நிறுவனங்கள் நீரை ஆயிரம் அடிகளுக்கும் கீழே உறிஞ்சியெடுப்பது சாதாரண நிகழ்வாக இருக்கிறது. கோக் போன்ற நிறுவனங்களும் இப்படித்தான் நீரை உறிஞ்சியெடுத்து தன் பானங்களைத் தயாரிக்கிறது.

நீர்த்தாங்கி (Aquifer) ஒன்றும் ரிசர்வ் வங்கியல்ல. அதிலுள்ள நீர் பெட்ரோலியம் போல் ஒருமுறை தீர்ந்தால் தீர்ந்ததுதான். அது மீண்டும் உருவாக எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என யாருக்கும் தெரியாது. நிலத்தடி நீரை அதிவேகத்தில் உறிஞ்சிய பசுமை புரட்சி வேளாண்மையை அறிமுகப்படுத்தியும், பன்னாட்டு நிறுவன தொழிற்சாலைகளைக் கணக்கு வழக்கின்றி நிலத்தடி நீரை உறிஞ்ச அனுமதித்தும், இதுவரை வேடிக்கையையே பார்த்துக் கொண்டிருக்கின்றன நம் அரசுகள். இதனால் சொந்த நாட்டு மக்களுக்குக் கிடைத்த அன்பளிப்பு - ஃபு:ளோரைட், குளோரைட், நைட்ரேட் கலந்த குடிநீர்.

தர்மபுரி மாவட்ட தண்ணீரில் ஃபுளோரைட் தாக்கம் அதிகமிருந்ததால் கொண்டுவரப்பட்ட ஒக்கனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஒரு ஜப்பானிய நிறுவனத்தின் உதவியுடன்தான் அமைக்கப்பட்டது. ஆக இங்குள்ள நிலத்தடி நீரை உறிஞ்சி நமக்கு ஃபுளோரைட் கலந்த நீரை அன்பளிப்பாக அளிப்பதும் கார்ப்பரேட்கள்தான். பிறகு நமக்கு ஃபுளோரைட் இல்லாத நீரை வழங்க முன்வருவதும் கார்ப்பரேட்கள்தான். இங்குதான் ஒரு கேள்வி எழுகிறது.

 
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்கள் பிரதிநிதிகளால், மக்களுக்காக இயங்கும் அரசுகளே, நீங்கள் என்னதான் செய்து கொண்டிருக்கிறீர்கள்?

Comments

Popular posts from this blog

Embracing Evening Serenity: A Peaceful Stroll / Walk

A Tranquil Evening Walk As the sun begins to set, I step out for my evening walk, the air cool and inviting. The park is alive with the simple joys of life: children laughing as they play, dogs running freely with boundless energy, and birds singing their evening songs. Walking along the path, I greet familiar faces and exchange friendly waves with neighbors. Each step feels like a gentle unwinding of the day’s stresses, a soothing balm for the soul. Reconnecting with Nature and Friends The park is a vibrant tapestry of life. I meet a few friends along the way, and we share light-hearted conversations and laughter, the kind that refreshes the spirit. We pause to watch the playful antics of the dogs and the unfiltered joy of kids as they chase after each other. These simple, everyday scenes remind me of the beauty in life's small moments, often overlooked but deeply enriching. A Serene Visit to the Temple My walk leads me to the local temple, a place of serene calm amidst the busyne...

Sacred Sojourn: Navigating Tirumala Darshan - A Comprehensive Guide to Booking Tickets and Spiritual Exploration

Embarking on a spiritual journey to Tirumala Balaji is a sacred and cherished experience for many devotees. Planning your visit to the abode of Lord Venkateswara requires thoughtful consideration of various options for darshan and travel. In this blog, we'll explore different avenues for booking tickets to Tirumala, ensuring a seamless and spiritually enriching pilgrimage. 1. TTD Website: Your Gateway to Divine Bliss The Tirumala Tirupati Devasthanams (TTD) website serves as the primary platform for booking darshan tickets. Visit TTD's official website to explore the available options, including Seegra Darshan, Sarvadarshan, and special entry darshan tickets. The website provides a user-friendly interface, allowing devotees to choose from various time slots and darshan categories. https://ttdevasthanams.ap.gov.in/home/dashboard 2. KSDTC One Day Tour Packages from Bangalore For devotees in Bangalore, the Karnataka State Tourism Development Corporation (KSDTC) offers one-day tour...

Mastering the Chaos: Staying Cool, Calm, and Fulfilled !!!

In the hustle and bustle of everyday life, I've found a way to stay cool and calm while handling all my responsibilities. Balancing personal tasks and making time for myself has become my key to thriving in the midst of chaos. My day starts with a mindful morning routine. Simple practices like Vipasana, morning prayers, a healthy breakfast, and a few minutes of planning set a positive tone for the day. This foundation helps me face any challenges with a sense of calm and composure. It's amazing how starting the day with intention can change your whole outlook. Throughout the day, I prioritize my tasks and manage my time efficiently. By breaking down my to-do list into smaller, manageable parts and setting realistic goals, I can stay productive without feeling overwhelmed. This structured approach helps me stay on top of my responsibilities while ensuring I have enough time for myself. Even in the midst of chaos, I always find moments for personal enjoyment and relaxation. Wheth...