உடுமலை: பிரபல தொழிலதிபரும், கம்மவர் நாயுடு மகா ஜனசங்க நிறுவன தலைவருமான கெங்குசாமி நாயுடு,86 மாரடைப்பால் காலமானார்.
நேற்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் காலமானார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை பேத்தப்பன்பட்டி கிராமத்தைச்சேர்ந்த வெங்கடசுப்பு நாயுடு, லட்சுமியம்மாள் தம்பதியினருக்கு உடுமலை தாலுகாவில் இருந்த பெத்தப்பம்பட்டி கிராமத்தில் மகனாக கடந்த 1931-ம் ஆண்டு பிறந்தார். இவர் அமெரிக்காவின் பிலடெல்பியாவில் உள்ள தொழில்நுட்ப கல்வி மையத்தில், வர்த்தக மேலாண்மை தொழில்நுட்பம் படித்துள்ளார். இவர், தொழிலதிபர் ஜிவி கோவிந்தசாமி நாயுடு மகள் ராஜலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். கடந்த 1989 அன்று கெங்குசாமி நாயுடுவுக்கு புதுச்சேரி பல்கலை., டாக்டர் பட்டம் அளித்துள்ளது.
பல்வேறு தொழில் நிறுவனங்களையும், கல்வி நிறுவனங்களையும், ஸ்ரீ வெங்கடேசா குருப்பில் உள்ள பல்வேறு காகித ஆலை நிறுவனங்களின் தலைவராகவும் இருந்தார்.
தமிழ்நாடு வாலிபால் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர், பொள்ளாச்சி கல்வி மாவட்ட வழிகாட்டி மற்றும் பாரத் ஸ்கவுட்டின் முன்னாள் தலைவர், கோவை நேரு விளையாட்டு கமிட்டி நியமன உறுப்பினர், மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி நிறுவனர், தாளாளர், தமிழ்நாடு காகித ஆலை சங்கத்தின் தலைவர், அகில இந்திய சிறு காகித ஆலை சங்கத்தின் துணை தலைவர், தென்னிந்திய காகித ஆலை சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தார். அவர், பல அமைப்புகளின் தலைவராக இருந்த போது, மாணவர்கள் மத்தியில் விளையாட்டை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுத்தார்.

Comments
Post a Comment